Saturday, 6 May 2017

ஜீவகாந்த பதிவு (BIO-MAGNETIC RECORD)

ஜீவகாந்த பதிவு (BIO-MAGNETIC RECORD)

ஜீவகாந்தம் என்பது பஞ்சபூதங்களால் ஆன உடல், ஸ்தூல உடல், சூக்குமஉடல், காரண உடல் அதாவது பரு உடல், உயிருடல், மன உடல் மனதில் ஆழ்மனம், அடிமனம், மேல்மனம் எனக்கூடிய மனதின் தன்மை ஆகிய அனைத்தும் கொண்ட மொத்த தொகுப்பு ஜீவ உடல் ஆகும். ஜீவகாந்தம் என்பது பஞ்சபூதங்களால்  ஆன உடலில் மனதில் உள்ள ஆழ்மனம், அடிமனம், மேல்மனம், இதில் நமது பெயர் ஆழ்மனதில் நம்மையரியாமல் மனனமாகி கொண்டேயிருக்கும் இந்த மனனத்தின் விளைவால் ஆழ்மனதில் பதிவு ஆகிறது இந்த ஆழ்மன பதிவு குறிப்பிட்ட அலைவேகத்தில் இயங்கி உடல் முழுவதும் பதியும்படி செய்கிறது.
இது எவ்வாறெனில் நீர் உள்ள பாத்திரத்தில்  நடுவில் ஒரு கல் விழுந்தால் எவ்வாறு அந்த அலை பாத்திரம் முழுவதும் நிறைந்து இருக்குமோ அதுபோல் நம்பெயர் பரு உடல், உயிருடல், மனஉடல் என்ற மூன்று உடலிலும் பதிவாகிறது. இந்த ஆழ்மன பதிவு குறிப்பிட்ட அலைவேகத்தில் இயங்கி உடல் முழுவதும் பதியும்படி செய்கிறது. இந்த மூன்று உடலின் மொத்த பதிவையே ஜீவகாந்தப் பதிவு என்பதாகும்.

இந்த ஜீவகாந்தத்தில் பெயர் பதிவு மட்டுமே நிகழ்வதில்லை கண்ணால் காணக்கூடியதும், நம் எண்ணங்களும், செயல்பாடுகளும், காதால் கேட்பதும், நாம் பேசக்கூடியது என அனைத்தும் பதிவாகின்றது இந்த பதிவுகளை பற்றி பின்னொரு நூலில் விளக்கிக் கூறலாம்.
  

பிறப்பும் இறப்பும் Born and Death


பிறப்பும் இறப்பும் Born and Death

                                   
பிறப்பிற்கு இறப்பிற்கும் இடைப்பட்ட நாட்களே ஒருவரது வாழ்க்கையின் வரலாறாக அமைகிறது. பிறப்பில் எவ்வித பாகுபாடுமில்லை. இறப்பிலும் எவ்வித பாகுபாடுமில்லை. பிறந்தவன் ஒருநாள் இறப்பது உறுதி.  யாரும் இவ்வுலகில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை. இப்படி இருக்கையில் நம் பிறப்பிற்கும் இடையே பல்வேறு மாற்றங்கள் ஏன்? நம்முள் குணாதிசயங்கள் மாறுபடுவது ஏன்? ஒருவர் குற்றவாளியாக இருக்கிறார்.  ஒருவர் எதிர்பாராத விபத்தினால் மரணமடைக்கிறார்.  ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்க்கையில் சொல்லிலடங்கா துன்பத்தை அனுபவிக்கிறார். ஒருவர் வியாதிகளால் அவதியுறுகிறார்.
ஒருவர் இந்த சமுதாயத்திற்கு நன்மைகளை செய்து வருகிறார். ஒருவர் இச்சமுதாயதிற்கு தீமைகளை செய்து வருகிறார். ஒருவர் வசதி வாய்ப்புகளோடு வாழ்கின்றார். ஒருவர் புகழும் அந்தஸ்தையும் பெற்று வாழ்கிறார். ஒருவர் கையையோ காலையோ இழந்து காணப்படுகிறார். ஒருவர் அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடையாக, வீழ்ச்சியாக உள்ளது. முன்னேற முடியாமல் துடிக்கின்றனர்.  குழந்தையில்லா நிலை, குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையில்லாத நிலை, திருமணம் தள்ளிக்கொண்டே செல்வதான நிலை, எதிர்காலம் பற்றிய பயம், தன்னுடைய மரணம் எப்படிப்பட்டதோ என்ற பயம், தொழிலில் நஷ்டத்தின் மேல் நஷ்டம் என அன்றாட வாழ்வில் காணும் துன்ப நிகழ்ச்சிகளோ ஏராளம் காரணம் என்ன? ஏன் இந்த மாறுபாடு ஒருவர் நன்மையை மட்டும் அடைகிறார்.
ஒருவர் தீமையை மட்டுமே அனுபவித்துவருகிறார். இதற்கு காரணம் யார்நம் பெற்றோர்களா? நம்மை சுற்றியுள்ளவர்களா? நம் நண்பர்களா? இந்த சமுதாயமோ? இந்த நாடா? இந்த உலகமா? நம் முன்னோர்களா? அல்லது நம் அரசாங்கமா என்று நம்முள் கேட்டு பார்த்தால் பெற்றோர்கள் எப்பொழுதாவது தன் குழந்தைகள் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவார்களா என்றால் இல்லை. அப்படியானால் பெற்றோர்கள் காரணமில்லை. முன்னோர்கள் என்றால் நம் கண்ணுக்கு தெரியாதவர்கள் இவர்களும் காரணமில்லை.
இந்த சமுதாயமா என்றால் இந்த சமுதாயம்தான் நமக்கு படிக்கவும், உடைகளும், உணவும் அளித்து பாதுகாத்து வருகிறது. இந்த சமுதாயமும் காரணமில்லை. இவ்வாறு பார்த்தால் யாரும் காரணமில்லை. நம் பெயரே நம் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாக உள்ளது. பெயர்தானே என்ற அலட்சிய போக்கு  இன்னும் நிலவுகிறது. காரணம் கெடுக்க நினைக்கமாட்டார்கள். ஆகவே அவர்கள் தன் குழந்தைகளுக்கு பெயரை அறியாமையால்  சூட்டுகிறார்கள் தவிர தெரிந்து சூட்டுவதில்லை.

மனிதர்களுக்குள் மாறுபாடுகள் இருப்பதற்கு காரணம் நாம் பிறக்கக்கூடிய தேதி, மாதம், வீதி எண், கிழமைநேரம்பஞ்சபூதங்களில்எண்அடிப்படையில் பிறந்துள்ளோம் என்பதை பொருத்து மாறுபடுகிறது.பிறப்பவர்கள் யாரும் துன்பப்படுவதற்கு என்று பிறக்கவில்லை. பிறந்த தேதி நம் குணாதிசயங்களையும், வீதி எண் நாம் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்வோம் என்பதையும் நிர்ணயம் செய்கின்றது.


பிரபஞ்ச தோற்றம் - பஞ்ச பூதங்களின் தோற்றம்பிரபஞ்ச தோற்றம் - பஞ்ச பூதங்களின் தோற்றம்

அண்ட கோடியிலுள்ள அனைத்து கிரகங்களும் அணுக்களின் கூட்டமேயாகும். இவ்வணுக்களின் கூட்டம் சுத்த வெளியின் வெளிப்பாடாகும். சுத்த வெளி என்பது இயங்காத நிலை. இயங்காத நிலையிலுள்ள ஓர் அணு இயங்கும் நிலைக்கு தற்சுழற்சி காரணமாக வெளிப்படும் போது இயங்கும் நிலை உருவாகிறது. அது சக்தி அணு எனப்படும். இந்த சக்தி அணு தற்சுழற்சி, வேகம், பருமன் இவற்றின் துணை கொண்டு  பல அணுக்கள் உருவாகின்றது. இவ்வணுக்களுக்கு இரண்டு காந்த தன்மைகள் உண்டு. தள்ளும் சக்தி, ஈர்க்கும் சக்தி என்பதாகும். இதையே நம் முனிவர்கள் அன்றைய மனிதர்களுக்கு விளங்காத காரணத்தால் காந்தத்திற்கு இரண்டு தன்மை தள்ளும் சக்தி, ஈர்க்கும் சக்தி. இதையே கந்தனுக்கு இரண்டு மனைவி வள்ளி, தெய்வானை என்று குறிப்பிட்டனர். காந்தன் காலத்தால் மருவி கந்தனானார். அதே போல் சிவ சக்தி என்பதும், சிவனின் தன் பாதி  சக்தி என்று கூறுவதன் உள்நோக்கம், இயக்கமற்ற சிவனுள் இயங்கும் சக்தி தன் பாதி என கூறப்பட்டது.
இச்சிவனை இயக்கமற்றவன் என்பதை சுத்த வெளி என்பர். இயங்கும், சக்தி களம் என்பது அண்ட கோடியில் அமைந்திருக்கும் கிரகங்கள், ஜீவராசிகள் அனைத்துமாகும்.
கிரகங்களின் தோற்றமும், அதன் சுற்று வட்டபாதைகளும் அது செல்லும் வேகமும் ஒரே மாதிரியானதாகும். அணுக்களின் கூட்டமே கிரகங்களாகும். அணுக்கள் ஒன்றோடொன்று மோதியும், விலகியும் அதாவது ஈர்க்கும் சக்தியையும், தள்ளும் சக்தியையும் கொண்டு அதிகமாக அவைகளும் இரு சக்திகளை மையமாக வைத்து இணைந்து கிரகங்கள் தன் வட்டப்பாதையில் தன்னை தானே சுழன்று கொண்டு தன் பாதையில் நகர்ந்தும் பிசகாமல் சூரியனை மையமாக வைத்து சுழன்று கொண்டு வருகிறது.
பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் ஆகிய அனைத்தும் அணுக்களின் கூட்டமேயாகும். இவற்றில் முதலில் தோன்றியது விண் ஆகும். பிறகு காற்று, அடுத்ததாக நீர், நெருப்பு, நிலம் என்பதாகும். கிரகங்கள் அனைத்தும் சக்தி களம் முழுவதும் ஒரு வட்ட வடிவமான ஒரு அமைப்பாகும். அவற்றில் விண் என்ற அணுவிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள், விண்கல் தன்னுள் மோதிக்கொண்டு காற்றை வெளிப்படுதுகின்றன. இக்காற்றானது மையத்தை நோக்கி விரைந்து வரவர அதன் அடர்த்தி அதிகமாகி ஆக்ஸிஜன் அதாவது நாம் சுவாசிக்கும் காற்றாக அமைகிறது. இதனையே நம் விஞ்ஞானிகள் பூமியிலிருந்து 10 மைல் சுற்றளவிற்கு காற்று அடர்தியாகவும், அதற்குமேல் 100 மைல் சுற்றளவிற்கு காற்று அடர்த்தி குறைவாகவும் அமந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆக்ஸிஜன் ஆகிய காற்று மையத்தை நோக்கி விரைந்து செல்லும் பொழுது ஹைட்ரஜன் வாயுவாக திரிந்து இவை ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் (H2O) இணைந்த நிலயை நீரின் தோற்றமாக உள்ளது. இந்த நீர் அதன் மையத்தை நோக்கி செல்லும் பொழுது நெருப்பாக ஆகிறது. இந்த நெருப்பு குழம்பு அதன் மையத்தை நோக்கி விரையும் பொழுது, இருக்கும் அணுக்கருக்குள் சிதைவு ஏற்பட மையத்திலிருந்து நெருப்பு குழம்பு பீறிட்டு வெளிவருகிறது. இது நீர் பரப்பிற்கு அப்பால் சென்று எரிமலையாக அமைகிறது.

அங்குள்ள காற்று ஆக்ஸிஜன் அந்த எரிமலையை குளிரச் செய்து கற்பாறைகளாக, மலைகளாக அமைகிறது. இவ்வாறு நிலம் அமைகிறது. இதன் மொத்த தொகுப்பை பூமி என்று அழைக்கிறோம்.  விண் தோன்றுவதற்கு முன் வெற்றிடமே அமைந்திருக்கவேண்டும். அதற்கு அடுத்த நிலையில் விண் உருவாகி விண்ணிலிறிந்து காற்று உருவாகி, நெருப்பிலிருந்து நிலம் உருவாகியுள்ளது. இதன் அடுத்த நிலையே பரிணாம வளர்ச்சியின் உச்சகட்டமாகிய உயிரினங்கள் முதல் மனிதன் வரை தோன்றியுள்ளனர்.  இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.


Friday, 5 May 2017

விதியை மதியால் வெல்லலாம் Change Your Fate


விதியை மதியால் வெல்லலாம் Change Your Fate
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு- குறள் 467
                                            
எண் கணிதம் Numerology என்றால் என்னவென்று எவரும் அறியாமல் நீண்டநெடும் காலமாக இருந்ததுண்டு.  சாமானியர்கள் மட்டுமே அவற்றை உணர்ந்து அதன் பயன் அறிந்து, முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது உள்ளங்கையில் தெரிகின்ற நெல்லிக்கனியைப் போன்ற உண்மை சம்பவங்களாகும். முழுமையாக  பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது அவர்கள் மீது சுமத்துகின்ற குற்றமல்ல! எண்கணிதம் என்றால் என்ன? அதன் பயன் யாது? என்பதை உணர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இங்கே என்னுடைய நோக்கம் என்னவெனில்! சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன் அடைந்து கொண்டால் போதாது. அவை சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும், இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மிக சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே என்பேரவா! இதில் மிகை ஏதுமில்லை. இதன் விழிதோன்றலே இப்பொழுது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டு இமைகளுக்கு விருந்தாக, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு திருப்பமாக அமைய இருக்கின்ற நான் கண்டெடுத்த "தங்கபுதையல்" ஆகும்.
எண் கணிதம் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்ற கணக்கு முறையல்ல! ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக குறிப்பிட்ட எண்கள் நிர்ணயிக்கப்பட்டு, அந்த எண்கள் மூலமாக ஒருவரின் பிறந்த தேதிக்கும் அவரின் பெயருக்கும் உள்ள தொடர்பு கணக்கிடப்பட்டு அவை கோடிட்டு கண்டறிந்து நல்லவை என்பனவற்றை எடுத்துக் கொண்டு தீயனவற்றை நம்மிடம் இருந்து அகற்றிக்கொள்வதுடன், செல்லும் விழி புரியாமல் தவிக்கும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுடன், தீராத நோய்களில் இருந்து விடுவித்து கொள்வதும், உயிருக்கே கேடு விளைவிக்கிற பேராபத்துக்களில் இருந்து நம்மை காத்து கொள்வதுமே எண் கணிதமாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியமான பாதுக்காப்பு கவசம் என்று எண் கணிதத்தைச் சொல்வது மிக பொருத்தமாகவே உள்ளது. 
எண் கணிதத்தால் தீர்க்கபாடாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நம் பெயரே காரணமாக உள்ளது. இந்த உலகத்தில் பிறந்த எந்த மனிதரும் துன்பப்பட வேண்டும் என்பதற்காக பிறக்கவில்லை. எல்லா இன்ப துன்பங்களுக்கும் பெயரே காரணமாக உள்ளது. ஆகவே இந்த மாபெரும் சக்தி பொருந்திய எண் கணிதத்தை முறைப்படி பயன்படுத்த, அதை கடைபிடிக்க முன்வருதல் வேண்டும். இது கடினம் என்றோ, இயலாது என்றோ சொல்வதற்கு ஏதும் இல்லை. மிகவும் எளிமையே! பிறந்த தேதியும் பெயரும் இருந்தால் போதுமானது. அவ்வாறு பிறந்த தேதி இல்லை என்றாலும் உங்கள் உடலில் உள்ள கிரகங்களின் ஆதிக்கத் தன்மையை உணர புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட "அட்சயா ஸ்கேன்"  மூலம் மிகத் துல்லியமாக 100% அதிர்ஷ்டத்தை பெற்று வாழ்வாங்கு வாழலாம். ஒவ்வொருவரின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்திவிடலாம். இது மட்டும் அல்ல வியாபாரம், சுபகாரியங்கள் தொடர்புடைய அனைத்து விபரங்களையும் மிக அருமையாக எண்கணிதம் வாயிலாக வலமானதாக, வலிமை உடையதாக உருவாக்கலாம்.

"விதியை மதியால் வெல்லலாம்" துன்பம் என்னும் விதியை எண் கணிதம் என்கின்ற மதியால் வெல்லலாம்.


உள்ளத்தால் உயர்வோம்!
அல்லதை விடுவோம்!!
எண்கணிதத்தால் வளர்வோம்!!!
வாழ்க வளமுடன்!!!
 இங்கே கிளிக் செய்யவும்


மேலும் படிக்க:


வற்றாத செல்வத்திற்கு கைகொடுக்கும் வாஸ்து Vasthu For Prosperity


வற்றாத செல்வத்திற்கு கைகொடுக்கும் வாஸ்து

வாஸ்துவைப் பற்றி பார்க்கும் பொழுது குறிப்பாக இரண்டு விதமானது. ஒன்று, மனையை தேர்வு செய்து அடிக்கல் நாட்டி தளம் போடும் வரை உள்ளது.  மனையடி சாஸ்திரம் ஆகும். மனையடிக்கு மேல் கட்டிடம் கட்டுவது என்பது வாஸ்து சாஸ்திரம் என்றழைக்கப்படும்.
இதில் சாஸ்திரம் பார்ப்பது என்பது நமது முன்னோர்கள் நல்லதோ, கெடுதலோ அனுபவித்து அனுபவத்தின் மூலமாக தான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவும்,   தான் பெற்ற துன்பத்தை யாரும் அனுபவிக்க வேண்டாம் என்பதற்காக தான் சாஸ்திரம் நிறுவப்பட்டது.
அந்த அடிப்படையில் இன்று வாஸ்து சாஸ்திரம் என்னிலடங்காத மக்களை சந்தோஷப்படுத்தியும்முன்னேற்றத்தை அனுபவிக்கவும் ஒரு விழிகாட்டியாக அமைந்துள்ளதில் முக்கிய பங்கு வாஸ்துவுக்கும் உண்டு.   பொதுவாக வீடு என்பது செங்கற்கலால் கட்டப்பட்டதல்ல.   இதயங்களால் கட்டப்பட்டது.  வீட்டிற்கு பேசும் சக்தி உண்டு.
அதன் மொழி நமக்கு புரியாததாலும் நம் காதுகளுக்கு எட்டாத ஓசையாக அமைந்துள்ளதால் அதை ஜடம் என எடுதுக் கொள்ளக்கூடாது.
ஒரு வீடு அவருக்கு பொருத்தமாக அமைந்தால் அது போன்று வாழவைக்கக் கூடியது ஒன்றுமில்லை. ஒரு வீட்டோடு ஒப்புமையாகாத போது கெடுப்பதும் நிகழும். சாதாரணமாக ஒரு நபருடன் பழகும்பொழுது சிலரிடம் நாம் நம்மையறியாமல் வெகுநேரத்தை எடுதுக் கொண்டு பழகுவோம்.
அத்தகைய பழக்கத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டோம். அதே போன்று தான் வீடும்.  குறிப்பாக ஒரு வீட்டில் கீழக்கு மற்றும் வடக்கு பாகங்களில் அதிகமாக இடம் விட்டு கட்டுதல் லெட்சுமி  கடாட்சத்தை ஏற்படுதுவதோடு இன்னும் அதிர்ஷ்டத்தை கூட்டு விக்கும்.
மேலே கூறியுள்ளது போல் மனையில் கிழக்குவடக்கு புறம் அதிகமான இடத்தை விட்டு கட்டுவது சிறப்பானது. மேற்கு, தெற்கு பகுதியில் அதிகமான இடம் விடுவது உடலுக்கு கெடுதுதலை தரும். குறிப்பபாக மேற்கில் அதிகமான காலியிடம் இருதய வால்வுகளால் பாதிக்கப்படும். தெற்கில் மிகுதியான இடம் காலியாக விட்டால்இருதய பலஹீனம்இருதய பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு அநேகம் பேர் வீடுகளில் பரம்பரையாக இருந்து வருபவர்கள் முதலில் சரிசெய்துகொள்ள வேண்டும்.
இல்லையென்றால் பரம்பரை வியாதியென நினைத்து கொண்டு அடுத்தடுத்த தலைமுறைகள் பாதிக்கப்படும். இதே போன்று கிணறுகளை வடக்கு, கிழக்கு சார்ந்து, வடகிழக்கு பாகங்களில் தான் போட வேண்டும்.
இவ்வாறு இல்லாமல் தென்கிழக்கில் கிணறு அமைந்தால் அவ்வீட்டில் பெண்கள் எப்பொழுதும் வியாதிக்கு உள்ளாகி இருப்பார்கள்.
வடகிழக்குவடக்குகிழக்கு பாகங்களில் ஆழ்குழாய் கிணறுகளோகீழ்நிலைத் தொட்டிகளோசெப்டிக் டேங்குகளோ இருந்தால்,   வீட்டில் மகிழ்ச்சி என்றும் நிலவும், லெட்சுமி கடாட்சம் மிகுந்து இருக்கும் எந்த கெடுதலான விளைவுகளிலிருந்தும் தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் அந்த வீட்டிற்கு இருக்கும்.

இதைப் போல வாஸ்துவைப் பற்றி விரிவாக தனி ஒரு நூலாக வெளியிட உள்ளேன்.பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வாஸ்து Vasthu For Womens


பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வாஸ்து 

வாஸ்துவுக்கு பெண்களை முக்கியமாக வைத்து பார்க்கப்படுவது எதனால் என்றால் வீட்டில் அதிகநேரம் (அதாவது 24 மணி நேரமும்)  பெண்களே இருப்பதால் பெண்களுடைய ஜாதகத்தையும்பிறந்ததேதியையும் வைத்து வாஸ்து படி அமைத்து தருகிறோம்.
வீட்டை பொறுத்த வரை அவர்களுக்கென்று உரிய பாகம் தென்கிழக்கு பாகம். அதற்கடுத்தாற்போல் வடமேற்கு பாகமாகும். அந்த பாகங்களை குறிப்பாக தென்கிழக்கு பாகங்களை சமையலுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு தென்கிழக்கில் உள்ள சமையலறையை பயன்படுத்த தவறினால் பெண்களுக்கு சாதாரணமாக அனுபவிக்கும் உரிமை பரிக்கபடும்.
அதேபோல் பெண்களுக்கு நோயினால் துன்பம் அனுபவிக்க கூடிய நிலையை ஏற்படுத்தும்.
அதே நேரம் கட்டிடதிற்கு வெளியே காம்பவுண்டிற்கு உள்ளே தென்கிழக்கு பாகத்தில் போர்வேல் அல்லது கிணறு (அல்லது) சம்ப் என போட்டால் அந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு. வீட்டிற்கு விளக்கேற்ற பெண் இல்லாமல் போகும்.


தென்கிழக்கு மூலை அக்னி மூலை என்பதால் அந்த மூலையில் எந்த ஒரு நல்ல பொருளும்எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைத்தாலும் பணப்பெட்டி வைத்தாலும்ஒன்றுக்கும் உபயோகமின்றி வீணாகும்.  தெற்கு சார்ந்த தென்கிழக்கில் வாசல்படி வைக்கலாம். கிழக்கு சார்ந்த தென்கிழக்கில் வாசல்படி வைக்கக்கூடாது.