உங்களை சரிசெய்து கொள்ளுங்கள்
உங்களை சரிசெய்து கொள்ளுங்கள் நாம் அன்றாட வாழ்வில் பல ஆய்வுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். நமக்கே தெரியாமல் சற்று கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். இந்த வாழ்கையே நாம் அனுபவிப்பதற்காகத்தான். பிறக்கும் எவ்வுயிரும் துன்பப்படுவதர்க்காக பிறப்பதில்லை. இது இயற்கையின் சட்டம். இந்த சட்டம் சரியாகத் தான் உள்ளது. நாம் அமைக்கும் வட்டம் தான் சரியாக உள்ளதா என அறிந்து சரியாக இருந்தால் போற்றுதற்கு உரியது. சரியில்லை என்றால் அதை சரி செய்து கொள்வதற்கான நிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நாம் அமைக்கும் வட்டம் என்பது நம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கையில் இருந்தது. அனால் இன்று நம் கையில் இந்த நிலை கிடைத்திருப்பதைத் தான் தங்க புதையல் என்ற முன்னொரு நூலில் குறிப்பிட்டிருந்தேன். ஆம் ! இறைவனுடைய படைப்பில் எந்த குறையுமில்லை. சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றதே. எதிலிருந்து தெரியுமா? சுத்த வெளி என்ற நிலையிலிருந்து பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் சற்றே திரும்பிப் பார்த்தல் உண்மை எதுவென விள...