Thursday, 11 August 2016

வெற்றியின் சாறு எண்கணிதம் நியூமராலஜி மற்றும் வாஸ்து வேயாகும்


வெற்றியின் சாறு எண்கணிதம் மற்றும் வாஸ்து வேயாகும்    


எல்லாமே ஒரு எண்ணத்தில்தான் துவங்குகிறது.   நம் எண்ணங்கள் மட்டுமே நம்

 வாழ்க்கையை ஆக்கவோ அழிக்கவோ சக்தி கொண்டவை. 

நியுமராலஜி ஒரு முழுமையான பலனை அள்ளி வழங்கும் வாழ்க்கைக்கு ஒரு

நேர்மையானநேரான எண்ண ஓட்டமே ஆரம்பம். 

 நியுமராலஜி நேரான கண்ணோட்டத்தை தட்டி எழுப்பி வெற்றிக்கு அடித்தளம் அமைக்கிறது. 

இந்த நியுமராலஜி தியானம், அனுபவம் அகியவற்றின் விளைவு ஆகும். இது,

   எண்ணங்களின் சக்தியைப் பற்றி எழுதப்பட்ட அளவுக்கதிகமான முழுமையான ஒன்றல்ல. 

இதில் விளக்கங்களை விட யோசனைகளே அதிகம். 

இது,  *  நம்மை உருவாக்கிக் கொள்வது நாமே *  என்ற உண்மையை, ஆண்களும்

 பெண்களும் கண்டுணர வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. 

அவரவர்களின் எண்ணங்களால்தங்களின் நிலையை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். 

நம் எண்ணங்களை கருக்கொள்ளும் மூளை ஒரு கை தேர்ந்த நெசவாளி. 

அந்த மூளை எனும் நெசவாளியால் உங்கள் உள்ளே இருக்கும் குணம் என்னும் துணியையும் நெய்ய முடியும். 

சூழ்நிலை என்னும் வெளித்துணியையும் அவனே நெய்கிறான். 

அறியாமையால் இதுவரை உங்கள் எண்ணம் எனும் நெசவாளியைக் கொண்டு நீங்கள்

 தப்பும் தவறுமாய் நெய்திருந்தாலும்கூடஇப்போது ஞானமும் மகிழ்ச்சியும் கலந்து,

  உள்ளும் புறமுமாக அழகிய துணிகளை நெய்துஅணிந்து மகிழுங்கள்! 

எண்ணமும் நடத்தையும்

*ஒருவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான்.  அதுவாகவே இருக்கிறான்*

  என்னும் முதுமொழியானது மனிதனின் இருத்தலையே தழுவி நிற்பதோடல்லாமல்

அவனுடைய ஒவ்வொரு நிலையையும் சூழ் நிலையையும் சுட்டிக் காட்டுகிறது. 

ஒரு மனிதன் என்பவன் அவன் என்ன நினைக்கிறானோ அதுவே. 

அவனின் குணமானது, அவனுடைய அனைத்து எண்ணங்களின் தொகுப்பே ஆகும். 

ஒரு செடியானது முளைத்து கிளைத்து வளரும்போது, அது ஒரு விதையில்லாமல்

 பிறக்கவில்லை என்று அறிகிறோமல்லவா, அதைப் போலவே, மனிதனின் ஒவ்வொரு 

செயலும், மறைந்திருக்கும் எண்ணம் எனும் விதையிலிருந்தே பிறக்கிறது. 

எண்ணமாக உதிக்காமல், எந்த செயலும் பிறப்பதில்லை. 

இது,  * கண நேரத்தில் செய்துவிட்டேன் *,   *ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டேன் *  என்று 

சாக்கு சொல்லப்படும் செயல்களுக்கும் பொருந்தும். 

செயல் என்பது எண்ணத்தின் மலராகும்!  மகிழ்ச்சியும் வருத்தமும் அதன் கனிகளாகும்! 

எனவேஒருவன் தன் எண்ணத்தினால் இனிப்பும் கசப்புமான பழங்களை தன் தோட்டத்தில்

 பிறப்பிக்கிறான்!   விளைவிக்கிறான்! 

மனிதன் என்பவன் ஒரு வரைமுறையின் வளர்ச்சி. 

அவன் வார்த்தெடுக்கப்பட்ட சிலை அல்ல! 

செயல் விளைவுத் தத்துவத்தைப் போலவேஅதை பொருள் உலகில் நாம் காண்பதைப்

 போலவே, செயல் எண்ணத் தத்துவமும் உண்மையான உண்மையாகும். 

நேர்மையானகடவுள் தன்மை பொருந்திய குண நலனை ஒருவன் பெற்றிருந்தால்,  அது

 தன்னிச்சையோ அல்லது அதிர்ஷ்டமோ அல்ல! 

மாறாகதொடர்ந்து பிடிவாதமாக அவன் பழகி வந்த நல்ல சிந்தனைப் பயிற்சியே ஆகும்! 

மேலான எண்ணங்களை தொடர்ந்து எண்ணி வந்ததன் விளைவே ஆகும்! 

நம்பகமற்ற கெட்ட குண நலன்களும் அது போலவே தொடர்ந்து கீழான எண்ணங்களை 

எண்ணி வந்ததன் விளைவே ஆகும். 

மனிதன் தன்னையே ஆக்கவோ அழிக்கவோ திறன் கொண்டவன். 

அவன் தன் எண்ணம் எனும் பட்டரையில் தன்னை அழிக்கக்கூடிய திறன் படைத்த

 ஆயுதங்களை செய்துகொள்கிறான்! 

அதே எண்ணம் எனும் பட்டரையில் தான் வாழ்ந்து மகிழக்கூடிய சொர்க மாளிகையையும்

 அவனால் உருவாக்கிக்கொள்ள முடியும்!  அம்மாளிகைமகிழ்ச்சிசக்திஅமைதி 

ஆகியவை குடிகொள்ளும் கோயில்! 

தன் எண்ணத்தை கட்டுப் படுத்தி சரியான வகையில் முறைப்படுத்துவதன் மூலமாகவே 

மனிதன் திரு உன்னதத்திற்கு ஏறிச் செல்ல முடியும். 

தன் எண்ணத்தை கட்டுப்படுத்தாமல்கெட்டது என அறிந்திருந்தும் அதே திசையில் 

செலுத்துவதன் மூலம் மிருக குணத்திற்கும் கீழாக இறங்கவும் முடியும்.
 

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும்இந்த இருவேறு கடை நிலைகளுக்கு இடையே

 தன் எண்ணங்களால் கட்டுண்டு வாழ்ந்து வருகிறான்! 

மனிதனே அவன் எண்ணங்களின் முதலாளி!

உலகில் எத்தனையோ அழகிய உண்மைகள் உண்டு. 

அவற்றை அவ்வப்போது நம் அகம் மகிழ வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவரும் உண்டு. 

ஆனால் இந்த ஒரு உண்மை அவற்றிலெல்லாம் அழகானது!  உன்னதமானது! 

இது கனி கொடுக்கும் உன்னத சத்தியம்! இது தன்னம்பிக்கை ஊட்டும் பெரிய உண்மை! 


*
மனிதன் எண்ணத்தின் எஜமானன். 

குண நலன்களை உருவாக்கும் குயவன். 

தன் நிலையை உருவாக்கி செப்பனிடுபவன். 

சூழ் நிலையை படைத்த சூத்திரதாரி. 

வாழ்க்கையை அமைக்கும் பிரம்மா!* 

மனிதன்தன் சக்தியுக்திஅறிவுத்திறன்அன்பு எல்லாவற்றிற்கும் மேலாக தன் 

எண்ணங்களை ஒழுங்குபடுத்தும் திறன் இவற்றையெல்லாம் உருக்கி ஒரு சாவியாக்கி தன்

 கையில் வைத்துக் கொள்ள முடியும்! அச்சாவி உனது பெயர் .

அச்சாவி, ஒவ்வொரு சூழ் நிலையையும் திறக்கும் சக்தி கொண்டது! 

சூழ் நிலைகளைத் திறக்கும் சாவிக்கொத்தையே கையில் வைத்துக் கொண்டிருக்கும்

 மனிதன், தன்னை எதுவாக நினைக்கிறானோ அதுவாக ஆக்கிக் கொள்ள முடியும்!

முற்றிலும் கைவிடப்பட்டஅனைத்து சக்தியையும் இழந்த நிலையிலும்கூடமனிதன் 

தன் நிலையை மாற்றவல்ல சாகஸக்காரன்! 

ஏன் அந்த நிலை அவனுக்கு வந்ததுதன் பெயர் எண்ணமெனும் வீட்டை 

முட்டாள்தனமாக நிர்வகித்ததால் தோல்வி நிலை வந்தது. 

செயல் எண்ணத் தத்துவத்தை புரிந்துகொண்டுசுய பரிசோதனை செய்து கொள்ளும்

 புத்திசாலியாக அவன் மாறும்போதுபுதுவடிவம் எடுக்கிறான்! 

இப்போது அவன் தன் எஞ்சிய சக்தியை ஒருமுகப் படுத்தி, அறிவுடன் அவற்றை

 இணைத்து, கனிதரும் பயன்களுக்கு தன் எண்ணங்களை செப்பனிடும்போது, இழி 

நிலையிலிருந்து திரு நிலைக்கு மாறும் விந்தையை செய்கிறான்! 

அவனே தன் எண்ணங்களின் எஜமானன்!  செயல் எண்ணத் தத்துவத்தை அவனுள்

 உணர்ந்து கொள்வதன் மூலமேஅவன் தன் நிலையை மாற்ற முடியும்! 

இப்பெரும் கண்டுபிடிப்பு அவனுள் நிகழவேண்டுமென்றால்அனுபவம்பிரதியிடும் திறன்

சுய பகுப்பாய்வு ஆகியவை அவசியம். 

மிகுந்த தேடுதல்தோண்டுதல் ஆகியவற்றின் பின்னரே தங்கமோ வைரமோ கிடைக்கிறது. 

தன் நிலைக்குக் காரணமான ஒவ்வொரு உண்மையையும் மனிதனால் கண்டுபிடிக்க

 முடியும். 

தன் ஆன்மா எனும் சுரங்கத்தில் இடைவிடாமல் தோண்டும்பொழுது, அவனே தன் குண 

நலன்களை உருவாக்கிக் கொண்டவன். தன் வாழ்க்கையை படைத்த குயவன்.   தன் பெரு

 வாழ்க்கையை கட்டிய வேலையாள். 

அவனால் சந்தேகத்திற்கு இடமின்றி இவற்றை நிரூபிக்க முடியும். 

தன் எண்ணங்களை கவனித்து, நெறிப்படுத்தி மாற்றுவதன் மூலம் அவனுக்கு ஏற்படும்

 மாறுதல்கள் பிறருக்கு ஏற்படும் தாக்கம்சூழ் நிலைகளின் மீது தாக்கம் ஆகியவற்றை 

நிரூபிக்க முடியும். 


செயலையும் விளைவையும் தொடர்புபடுத்தி பார்ப்பதன் மூலமும்தன் சிறு சிறு

 அனுபவங்களையும் உன்னிப்பாக கவனிப்பதன் மூலமும்அன்றாட நிகழ்வுகளை உற்று

 நோக்குவதன் மூலமும்புரிந்து கொள்ளுதல்அறிவுசக்தி ஆகியவற்றின் மீது நம் 

எண்ணங்களின் ஆதிக்கத்தைப் புரிந்து கொள்ள இயலும். 

*
தேடுங்கள், கண்டடைவீர்கள்*  என்ற முதுமொழி பெயர் தேடுதலுக்கு மிகப் 

பொருத்தமானதாகும். 

*
தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப் படும்*  என்பதைப் போலவேபொறுமைபயிற்சி,

  இடைவிடாத தொடர் முயற்சிகள் மூலம் பெயர் மூலம் அறிவுத் திருக்கோயிலை 

ஒருவன் அடைந்து அதனுள் நுழைய இயலும்! 

சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம்

ஒரு மனிதனின் மனதினை ஒரு தோட்டத்திற்கு ஒப்பிடலாம். 

அத்தோட்டத்தை செப்பனிட்டு பயிரிடவும் முடியும். அல்லது தரிசாக விட்டு வைக்கவும் இயலும். 

ஆனால் பயிரிடப்படுகிறதோ இல்லையோதரிசு நிலத்தில் ஏதாவது முளைக்கும்! 

உழுது நல்ல விதைகளை ஊன்றாவிட்டாலும்பயனற்ற களைகளின் விதைகள் தாமாகவே

 விழுந்து, எண்ணற்ற களைச் செடிகள் மண்டிக் கிடக்கும்! 

ஒரு நல்ல தோட்டக்காரன் எப்படி தன் தோட்டத்தை உழுது பலன் தரும் மலர்களையும் 

அவன் விரும்பும் கனிகளையும் விளைவித்துகளைகள் முளைக்காமல் காக்கின்றானோ,

  அதைப் போலவே ஒவ்வொரு மனிதனும் தன் மனம் என்னும் தோட்டத்தில் வந்து 

விழும் பயனற்றதவறான எண்ணங்களை களையெடுத்துபயனுடையசரியான

தூய்மையான எண்ணங்களை விதைத்து அவை தரும் பலன்களைச் சுவைக்க வேண்டும்! 

எண்ணங்களை களையெடுத்துஎண்ணங்களை விதைக்கும் இப்பயிற்சியை ஒருவன் 

இடைவிடாமல் செய்து வரும்போதுதான் தன் வாழ்க்கையை அமைக்கும் படைப்பாளிதன்

 குணத்தின் சிறந்த தோட்டக்காரன் தானே என அவன் உணர்ந்து கொள்வான்! 


அப்போதுதான் தன் குண நலன்கள்சூழ்நிலைகள்தன் உன்னத வாழ்வு ஆகியவற்றை தன்

 மனமென்னும் கருவியால் தானே செம்மைப் படுத்த முடியும் என்ற எண்ணங்களின் 

விதியை மிகத் துல்லியமாக உணர்கிறான்! 

எண்ணமும் குணமும் ஒன்றே.   குணம் என்பதுசுற்றுப்புறம்சூழ் நிலை,   வாய்ப்புகள்

 இவற்றின் மூலம் அறியப்படுவதால்எண்ணங்களே வெளிப்புற நிலையை நிர்ணயிக்கும்

 உள் நிலையாக விளங்குகிறது என அறியலாம்.

ஒரு சில சந்தர்ப்ப சூழ் நிலைகள் மட்டுமே அவனுடைய உண்மையான முழுமையான

 குணத்தை பிரதிபலிக்காது என்று வைத்துக்கொண்டாலும்அந்த சில சூழ் நிலைகளும்கூட

 அவன் எண்ணத் துகள்களின் விளைவே.  அவன் முன்னேற்றத்தோடு பின்னிப் 

பிணைந்தவையே ஆகும்.

ஒவ்வொரு மனிதனும் எங்கிருக்கிறானோ என்னவாக இருக்கிறானோ அது தற்செயலல்ல.

  இருத்தலுக்கான சட்ட திட்டங்களாலேயே.

குண நலனை நிர்ணயிக்கும் தன் எண்ணப் பயிற்சிஎண்ணங்களின் தொடர்ச்சியினாலேயே

 அவன் தன்னை அங்கு கொண்டு சேர்த்தான்.

வாழ்க்கை நெறிமுறைகளில் தற்செயல்களுக்கு இடமில்லை.   என்றும் தவறிடாத எண்ணச்

 செயல் பெயர் தத்துவ சட்டத்தின் விளைவே ஆகும்.

சூழ் நிலைக்குப் பொருந்தாமல் நெருடலுடன் வாழ்பவர்க்கும்,   சூழ் நிலையில் திருப்தி 

அடைந்தவர்க்கும் எண்ணச் செயல் பெயர் விதி பொருந்தும்!


பரிணாம வளர்ச்சி யதார்த்தத்தின்படிஎங்கு வளர வாய்ப்புள்ளதோ அங்கு மனிதன்
 இருப்பான். 

ஆன்மீகப் பாடங்கள் தரும் சூழ் நிலைகள் தன்னை தேக்க நிலையில் வைக்கும் என்று
 அவன் உணர்வதால்அச்சூழ் நிலைகள் வழிவிட்டுமற்ற சூழ் நிலைகள் உருவாகின்றன. 

வெளிப்புற நிகழ்வுகளே தன்னை உருவாக்குகின்றன என அவன் கருதும் வரையிலும்சூழ்
 நிலைகள் அவனைப் பந்தாடுகின்றன! 

ஆனால்தானே தன்னை ஆக்கும் சக்திதன்னால் மறைந்திருக்கும் வயலையும்தன்னை
 உருவாக்கும் விதைகளையும்அந்த எண்ண விதைகள் முளைப்பிக்கும் சூழ்
 நிலைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்று அவன் உணறும்போதுஅவனே 
அவனுடைய உண்மையான எஜமானன் ஆகிறான்! 

ஒருவன் தன் எண்ணங்களிலிருந்தே செயல்கள் முளைத்தன என்று உணர்கிறான்!
 

சுய கட்டுப்பாட்டுடன் சுய சுத்தம் செய்துகொள்கிறான்! 

இப்போது அவனுக்குத் தெளிவாக ஒன்று புரிகிறது.   எந்த விகிதத்தில் தான் நல்ல 
எண்ணங்களை பிடிவாதமாக பயிற்சி செய்தோமோ,   அந்த விகிதத்திலேயே நல்ல சூழ் நிலைகள் உருவானதென்று!
 

எந்த அளவுகோலில் தன் எண்ணங்களை மாற்றிக் கொண்டானோ,   அதே அளவுகளில் சூழ் 
நிலைகளும் மாறிப் போகிறது. 

தன் குண நலன்களை செம்மைப்படுத்தும் முகமாக எவனொருவன் முழுமையாக தன்னை
 ஒப்புக் கொடுத்து,   ஈடுபாட்டுடன்,   குறைகளை களைய முனைகின்றானோ,   அந்த
 அளவிற்கு தொடர்ந்த வெற்றிகளும்,   குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைவதே 
சத்தியம்! 

ஆத்மா தான் ரகசியமாக விரும்பும் விஷயங்களை மட்டுமே ஈர்க்கிறது. 

அது அன்பு செலுத்தும் நிலைகளையும் மற்றும் பயங்களையும் ஈர்க்கிறது. 

செறிவூட்டப்பட்ட உயரிய விருப்பங்களுக்கு அது ஏறிச் செல்லுகிறது. 

கேடுகெட்ட விருப்பங்களின் தாழ்ந்த நிலைக்கும் அது சென்று விழுகிறது. 

ஆத்மாசந்தர்ப சூழ் நிலைகளின் மூலமாக தன் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்கிறது. 

ஒவ்வொரு எண்ண விதையும்மனம் எனும் தொட்டத்தில் விழ அனுமதிக்கப்படும்போது
வேர்விட்டு, தன்னை ஒத்த எண்ணங்களை முளைப்பித்துசெயல் பூக்களை மலரச்
 செய்துசூழ் நிலைகள் வாய்ப்புகள் ஆகிய கனிகளை தாங்கி நிற்கிறது. 

நல்லெண்ண விதைகள் சிறந்த கனிகளையும்,   கெட்டெண்ண விதைகள் கொடிய
 பழங்களையும் தரும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 
வெளி உலகச் சூழ் நிலைகளானவை உள் உலக எண்ணங்களைத் தழுவி,   அவற்றுடன்

 ஒத்திருப்பவை.
 

இனிப்பான மற்றும் கசப்பான வெளிப்புற நிலைகள் தனிமனிதனின் தீர்க்கமான 

தன்மைகளை நிர்ணயிக்கின்றன. 

அறுவடை செய்யும் விவசாயி என்ற வகையில் மகிழ்ச்சி மற்றும் வருத்தம் இரண்டையும்

 மனிதன் இனம் கண்டு கொள்கிறான்,   அனுபவத்திலே! 

ஆழ்மன விருப்பங்கள்,   அடையும் விழைவுகள்,   எண்ணங்கள் இவற்றைத் தொடர்ந்து

 மனிதன் தன் ஆளுமையை இவற்றிடம் இழந்து,   கடைசியாக வெளிப்புற வாழ்வியல்

 சூழல்கள் எனும் முழுமைக்கு வந்து சேர்கிறான். 

வளர்ச்சி,   மாறுதல்கள் இவை குறித்த விதிகள் நிரூபணமாகின்றன! 

ஒரு மனிதன், பிச்சைக்கார விடுதிக்கோ அல்லது சிறைச்சாலைக்கோ விதியின் 

வலிமையினாலோ அல்லது சந்தர்ப்ப சூழ் நிலையினாலோ வந்து சேர்வது இல்லை. 

அடிப்படை விருப்பங்களாலும், கொடிய எண்ணங்களின் பாதையிலும் நடந்து வந்துதான் 


பிச்சையெடுக்கவோ,   சிறைச்சாலைக்கோ வருகிறான். 

வெளிச் சக்திகளால் உந்தப்பட்டோ,   மன அழுத்தத்தின் காரணமாகவோ,   ஒரு 

தூய்மையான எண்ண ஓட்டம் கொண்ட மனிதன் திடீரென்று கொடிய செயல்களில் 

விழுந்துவிட மாட்டான். 

ரகசியமாக ஆழ்மனதில் ஒளிந்திருந்த கொடிய எண்ணங்கள் வெகு நாட்கள் காத்திருந்து,

வாய்ப்புக் கிடைத்ததும் செயலாக வெளிப்பட்டன! 


சூழ் நிலைகள் மனிதனை உருவாக்குவதில்லை.   சூழ் நிலைகள் அவனை அவனுக்கே அடையாளம் காட்டுகின்றன. 

நரித்தனமான கெட்ட எண்ணங்களில்லாமல் கொடிய செயல்கள் பிறப்பதில்லை. 

தொடர்ந்த,   மேலான எண்ண விழைவுகளில்லாமல் மகிழ்ச்சியோ நற்பெயரோ பிறப்பதுவும் இல்லை. 

எனவே, பெயர்   எண்ணங்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற ஒரே 


காரணத்தினால்,   மனிதனே அவனுக்கு எஜமானன். தன்னையே உருவாக்கும் காரணகர்த்தா! 

சூழ் நிலைகளை உருவாக்கும் பிரம்மா!   தன்னையே தான் எழுதிக் கொண்ட எழுத்தாளன்! 

பிறப்பிலேயே ஆத்மா,   தனித்துவமும் நினைவும் பெற்று,   வாழ்க்கையெனும் ஸ்தல


 யாத்திரையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தன்னை தனக்கே 

வெளிப்படுத்தும் சூழ் நிலைக் கலவைகளை தன்னகத்தே ஈர்த்து,   முன்னேறுகிறது!

ஆத்மா தன் நினைவுகளால் ஈர்க்கும் சூழ் நிலைகள்,   ஆத்மாவின் தூய்மையையும்


  அல்லது சீர்கேட்டையும் பிரதிபலிக்கும்! 

ஆத்மா,   தன் எண்ணங்களால் ஆகர்ஷிக்கும் சூழ் நிலைகள்,   ஆத்மாவின் கம்பீரத்தை


 அல்லது கோழைத்தனத்தை பிரதிபலிக்கும்! 

மனிதன்,   தான் விரும்புவனவற்றை ஈர்ப்பது இல்லை.   தான் எதுவாக இருக்கிறானோ


 அதனையே ஈர்க்கின்றான்!