Wednesday, 18 September 2024

1,10,19,28 தேதிகளில் பிறந்தவர்களுக்கான குணாதிசயம்

 1,10,19,28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தலைமை தாங்குபவர்.

மக்கள் எந்த விதத்திலாவது தலைமை பதவியை கொடுத்து சிறப்பிக்கின்றனர், தலைவா என்று அனைவரும் அழைப்பதும் உங்க ளையே,காரணம் திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள்,எந்த துறையிலும் தனக்கென்று ஒரு தனி பாணியை பயன்படுத்தி யாரும் முந்த முடியாத அளவுக்கு தனித்தன்மையை வெளிப்படுத்திகொண்டே முன்னேறிச் செல்பவர், எந்த துறையிலும் முதன்மை என்றால் சாதாரணமான விஷயமில்லை அந்த அளவிற்கு தீவிரமான உழைப்பும், திட்டமிடுதலும், முயற்ச்சியும் தான்.நீங்கள் நினைத்தால் அதிர்ஷ்டம் உங்கள் உள்ளங்கையில், எதற்கு இதை கூறுகின்றேன் என்றால் உங்களுக்கு திட்டமிடுதலும்,உழைப்பும் ,முயற்சியும் இயற்கையாகவே ஒட்டிகொண்டிருக்கும் அனால் இலக்கு(aim) மட்டும் தான் தேவை,அதற்க்கு மானசீகமாக ஒரு சாதனையாளரை முன்னிறுத்தி(ரோல் மாடல்) செயல்பட்டால்,இலக்கு தானாக அமைந்து விடும் ,பிறகென்ன நீங்களும் சாதனையாளர் தானே,மற்றவர்கள் உங்களை வழிநடத்த விரும்பமாட்டீர்கள். இது உங்களது தனித்தன்மையாக,இருந்தாலும் காது கொடுத்து கேளுங்கள்,அது உங்களது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்,எது எப்படி இருந்தாலும் பெயரும் புகழும் உங்களுக்குதான்,என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்,உங்களுக்கு படைப்பாற்றல் ஏராளமாக உள்ளது.உங்களுடைய கருத்துக்கள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்,உங்களுடைய கருத்துக்களை தினசரி வாழ்க்கையிலும் கடை பிடிப்பவர்,வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற தீ உங்களுக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கும்,இது கடைசி வரை இருந்து கொண்டே இருக்கும்,உங்களிடம் நிர்வாகத்திறமை ஏராளமாக இருக்கிறது.காரியங்களை நிறைவேற்றி கொள்வதில் சிறந்தவர்.உங்களிடம் இருப்பது நேர்மை,வேலையில் கடமையை சரியாக செய்வது மட்டுமே உங்களுக்கு பிடிக்கும்.மற்றவர்கள் முன் வேலை செய்வது போல் பாசாங்கு செய்ய மாட்டீர்கள்,அது உங்களுக்கு முற்றிலும் பிடிக்காது.அதிகார தோரணை எப்பொழுதும் வெளிப்படும்.அவசரப்படக்கூடிய தன்மையும் இருக்கும்.நீங்கள் பிறருடைய குறைகளை விமர்சிப்பவராக இருப்பீர்கள்,இது தவறு என்று தெரிந்தாலும் உங்களால் தவிர்க்க முடியாது.மற்றவர்களிடம் உள்ள குறைகளை காணுதல் என்பது உங்களுக்குள் ஒரு விதமான எதிர்மறை(negative) தாக்கத்தை ஏற்படுத்தும்.அதுவே உங்களது முன்னேற்றத்துக்கு தடையாகவும்,உங்கள்மீது உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள்,உங்களை நேசிப்பவர்களும் உங்களை விட்டு  விலகி தூரத்தில் நிற்ப்பார்கள்.குறை கூறும் உங்களை யாரும் குறை கூறினால் பிடிக்காது,அவர்களை வெறுப்பீர்கள்,அவர்களுக்கு எந்தவிதமான சிறு உதவியும் செய்யமாட்டீர்கள்,

உங்களுக்கு புகழ்ந்தால் அவ்வளவு பிடிக்கும்,இதுதான் உங்களது குறை,கொடுத்து வாங்குதல் என்பது தான் தத்துவம் உங்களுக்கு பிடித்த இந்த புகழ்ச்சியை மற்றவர்களுக்கு கொடுத்து பாருங்கள்,நீங்கள் எந்த அளவிற்கு உயர்கிறீர்கள் என்பது புரியும்,மற்றவர்களுடைய மனதிலுள்ள இதய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து மற்றவர்களை ஆட்டுவிக்கும் பம்பரமாய் ஆகி விடுவீர்கள்.நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை அப்படியே கேட்பார்கள்.அதட்டி வேலை வாங்குவதை தவிர்த்து தட்டிகொடுத்து வேலை வாங்குங்கள்.வேலை செய்பவர் உங்கள் எண்ணாக இல்லாது இருப்பதே அவர்களின் குறை,அதனால் தான் உங்களிடம் வேலைக்கு வந்துள்ளார்.இது இயற்கை செய்த செயல்.இல்லைஎன்றால் அவர்களும் தலைமையில் இருப்பார்கள்.உங்களை தலைமைக்கு அனுப்பிய இயற்கைக்கு நன்றி கூறி அன்பாக,அரவணைத்து தட்டிகொடுத்து வேலை வாங்குங்கள்.உங்களை விட நிவாகத்திறமை குறைவாக இருப்பதால் தான் உங்களிடம் பணிபுரிகின்றனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.எனது எண்ணம் நீங்கள் வாழ்வில் வெற்றி பெற அனைவரிடமும் அன்பாக இருங்கள்.அன்பை கொடுத்து அன்பை பெறுங்கள்.எதையும் பொறுமையாக செய்யுங்கள்.சரியான ஒரு முன்மாதியான சாதனையாளரை தேர்வு செய்யுங்கள்.அவரைவிட சிறப்பாக சாதிக்க இலக்கை நிர்ணயுங்கள்.இலக்கின் மீதே கவனமாக இருங்கள்.நீங்கள் நினைப்பது எளிமையாக நடக்கும்.

நீங்கள்பழகுவதற்கும், பார்வைக்கும் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கைஉங்களிடம் அதிகம் இருக்கும். நீங்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலைவாங்குவீர்கள்.. மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின்பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள்.அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.

அரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள் உங்களுக்குநிச்சயம் ஏற்படும். நீங்கள் அரசியலில் பெரும் செல்வாக்குடன் விளங்குவீர்கள். ஆனால் நாணயமானஅரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பீர்கள்.அதிகாரம் காண்பிப்பதில் நீங்கள் மிகவும் ஆசைகொண்டவர்கள். மனதில்ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள். தோல்வி ஏற்படுவதைத்தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத் துணிவுடனும், புதிய திட்டத்துடனும்சலிக்காமல் செயலாற்றுவீர்கள். புதிய செய்தியினை ஆராய்வதில்மகிழ்ச்சியடைவீர்கள். நேர்மையான முறையிலேயே எதையும் அடைய வேண்டும் என்றஎண்ணம் கொண்டிருப்பீர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றும் அணியும் பொருள்கள்மிகவும் மதிப்பாகத் தெரிய வேண்டும் என்று அதற்காகச் செலவு செய்வீர்கள். மனமகிழ்ச்சிக்காக தாராளமாகச் செலவு செய்யத் தயங்கமாட்டீர்கள்.

தாங்கள் உதவுவதைக் கூட வெளிப்படையாகச் சொல்லி விளம்பரம் அடைய ஆசைப்படமாட்டார்கள். நல்ல பெயரும்புகழும் நிச்சயம் அடைவீர்கள். ‘‘இவர்தான் எனது நண்பன், இவர்தான் எனதுஎதிரி’’ என்று எதையும் மறைத்து வைக்காமல் கூறி விடுவீர்கள். மிகுந்தரோஷமும், எதையும் எடை போடும் குணமும் உண்டு. வாக்குறுதி கொடுத்துவிட்டால்எப்பாடு பட்டாவது அதை நிறைவேற்றுவீர்கள். பொதுவாகச் சோம்பேறித் தனமும், பொறாமையும் உங்களுக்கு பிடிக்காது. அடுத்தவர் பொருட்களையும்சொத்துக்களையும் விரும்ப மாட்டீர்கள்.படிப்பறிவைவிடப் பட்டறிவு (அனுபவம்) அதிகம் உண்டு. இந்த எண் சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். மலை வாசஸ்தலங்களும், பெரும் பயணங்களும்உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த வாணிகத்திலும், நேர்மையையும், வாக்குறுதியையும் கடைப்பிடிப்பீர்கள்.இலாபத்திற்காகத் தங்களது மனச்சாட்சியை ஒதுக்க மாட்டீர்கள். தேவையானால்பெருந்தன்மையுடன் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவீர்கள். ஆனால்மற்றவர்கள் அலட்சியம் செய்தால் மட்டும் உங்களால் தாங்க முடியாது. அவர்களைஉண்டு அல்லது இல்லை எனச் செய்து விடுவீர்கள். ஆனால் நேர்மையான வழியில்தான்நடப்பீர்கள். பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். எப்பேர்ப்பட்டஎதிரியும், நேராக வந்து மன்னிப்புக் கேட்டால், உடனே மன்னிக்கும் மாண்புபடைத்தவர்கள். மீண்டும் அவர்களுக்கு உதவியும் செய்வீர்கள். பொதுவாகத்திருமணம்காலம் கடந்தே நடைபெறும். காதல் விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்என்றாலும், ஏமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனைவிக்கும், நேரம்ஒதுக்கி, அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அரசியலில் வெற்றி பெற, ஒரு புகழ்பெற்ற கட்சியோ, அல்லது இயக்கமோ உங்களுக்குத் தேவை. காரணம் மக்களைஆசை காட்டி ஏமாற்றும் வித்தைகள் உங்களுக்குத் தெரியாது. பொதுமக்களுக்குஉண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச் செய்வீர்கள். மக்களுக்குப்பிடிக்காத செயல்களையும், மக்களின் பிற்கால நன்மைகளுக்காகத் துணிந்துகாரியங்களைச் செயல்படுத்துவீர்கள்.  சோதிடம், ஆன்மீகம், வைத்தியம் போன்ற கலைகளில் ஈடுபாடும்உண்டாகும். தனிமையில் அதிகமாகச் சிந்திக்கவும், செயலாற்றவும்விரும்புவீர்கள்.

உங்கள் பெயர் எப்படி உள்ளது அறிந்துகொள்ள தொடர்புகொள்ளவும்
உங்கள் பெயர் அதிர்ஷ்டமாக அமைந்தால் வாழ்க்கையில் வெற்றி உறுதி.
உங்கள் வாழ்க்கையை வலமாக இருக்க உதவுவது பெயரே ஆகும் .
உங்கள் முதல் சொத்து நல்ல பெயர் 
பெயர் தான் பெற்றோர் அரவணைப்பு , நல்ல படிப்பு,,நல்ல வேலை ,நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர், ஆரோக்கியம் என சகலமும் கொடுக்ககூடியது. 
உங்களுடைய பெயரை வைத்து நான் உங்கள் படிப்பு ,வருமானம் ,நோய் வரை கூற முடியும் .

AKSHYAN WORLD

AKSHAYADHARMAR

SAMAYAPURAM ,TRICHY - 98424 57516 // 91762 33393

NUMEROLOGY// LUCKY HOME AND LAND //LUCKY STONE//LUCKY CARD//LUCKY CHART

NUMEROLOGY  நியூமராலஜி

அதிர்ஷ்டமான பெயர்

        குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர்  )

        சிறுவர்களுக்கு அதிர்ஷ்டமான பெயர் ( நல்ல படிப்பு,நல்ல வேலை நல்ல வருமானம் ,நல்ல வாழ்க்கை துணைவர்  )

        பெரியவர்களுக்கு அதிர்ஷ்டமான பெயர் (கையெழுத்தில் திருத்தம் செய்ய )

        கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான பெயர்

        கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான லோகோ

        தயாரிக்கும் பொருளுக்கு அதிர்ஷ்டமான ப்ரான்ட் நேம்

        கோவிலுக்கு க்கு அதிர்ஷ்டமான பெயர்

        வீட்டிற்கு கடைக்கு அதிர்ஷ்டமான பெயர்

        வாகனத்திற்க்கு அதிர்ஷ்டமான பெயர்

        வளர்ப்பு செல்ல பிராணிக்கு அதிர்ஷ்டமான பெயர்

வீடு, இடம் ,கடைக்கு ,கம்பெனிக்கு அதிர்ஷ்டமான அமைப்பு (அறிவியல் அமைப்பு )

எண்: வாகனத்திற்கு,செல் போனிற்க்கு அதிர்ஷ்டமான எண்     

தேதி :திருமண தேதி ,கடை திறக்கும் தேதி

வலைதளம் ,லோகோ ,ஈமெயில் அதிர்ஷ்டமான பெயர்


No comments:

Post a Comment