Friday 5 May 2017

வற்றாத செல்வத்திற்கு கைகொடுக்கும் வாஸ்து Vasthu For Prosperity


வற்றாத செல்வத்திற்கு கைகொடுக்கும் வாஸ்து

வாஸ்துவைப் பற்றி பார்க்கும் பொழுது குறிப்பாக இரண்டு விதமானது. ஒன்று, மனையை தேர்வு செய்து அடிக்கல் நாட்டி தளம் போடும் வரை உள்ளது.  மனையடி சாஸ்திரம் ஆகும். மனையடிக்கு மேல் கட்டிடம் கட்டுவது என்பது வாஸ்து சாஸ்திரம் என்றழைக்கப்படும்.
இதில் சாஸ்திரம் பார்ப்பது என்பது நமது முன்னோர்கள் நல்லதோ, கெடுதலோ அனுபவித்து அனுபவத்தின் மூலமாக தான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவும்,   தான் பெற்ற துன்பத்தை யாரும் அனுபவிக்க வேண்டாம் என்பதற்காக தான் சாஸ்திரம் நிறுவப்பட்டது.
அந்த அடிப்படையில் இன்று வாஸ்து சாஸ்திரம் என்னிலடங்காத மக்களை சந்தோஷப்படுத்தியும்முன்னேற்றத்தை அனுபவிக்கவும் ஒரு விழிகாட்டியாக அமைந்துள்ளதில் முக்கிய பங்கு வாஸ்துவுக்கும் உண்டு.   பொதுவாக வீடு என்பது செங்கற்கலால் கட்டப்பட்டதல்ல.   இதயங்களால் கட்டப்பட்டது.  வீட்டிற்கு பேசும் சக்தி உண்டு.
அதன் மொழி நமக்கு புரியாததாலும் நம் காதுகளுக்கு எட்டாத ஓசையாக அமைந்துள்ளதால் அதை ஜடம் என எடுதுக் கொள்ளக்கூடாது.
ஒரு வீடு அவருக்கு பொருத்தமாக அமைந்தால் அது போன்று வாழவைக்கக் கூடியது ஒன்றுமில்லை. ஒரு வீட்டோடு ஒப்புமையாகாத போது கெடுப்பதும் நிகழும். சாதாரணமாக ஒரு நபருடன் பழகும்பொழுது சிலரிடம் நாம் நம்மையறியாமல் வெகுநேரத்தை எடுதுக் கொண்டு பழகுவோம்.
அத்தகைய பழக்கத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டோம். அதே போன்று தான் வீடும்.  குறிப்பாக ஒரு வீட்டில் கீழக்கு மற்றும் வடக்கு பாகங்களில் அதிகமாக இடம் விட்டு கட்டுதல் லெட்சுமி  கடாட்சத்தை ஏற்படுதுவதோடு இன்னும் அதிர்ஷ்டத்தை கூட்டு விக்கும்.
மேலே கூறியுள்ளது போல் மனையில் கிழக்குவடக்கு புறம் அதிகமான இடத்தை விட்டு கட்டுவது சிறப்பானது. மேற்கு, தெற்கு பகுதியில் அதிகமான இடம் விடுவது உடலுக்கு கெடுதுதலை தரும். குறிப்பபாக மேற்கில் அதிகமான காலியிடம் இருதய வால்வுகளால் பாதிக்கப்படும். தெற்கில் மிகுதியான இடம் காலியாக விட்டால்இருதய பலஹீனம்இருதய பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு அநேகம் பேர் வீடுகளில் பரம்பரையாக இருந்து வருபவர்கள் முதலில் சரிசெய்துகொள்ள வேண்டும்.
இல்லையென்றால் பரம்பரை வியாதியென நினைத்து கொண்டு அடுத்தடுத்த தலைமுறைகள் பாதிக்கப்படும். இதே போன்று கிணறுகளை வடக்கு, கிழக்கு சார்ந்து, வடகிழக்கு பாகங்களில் தான் போட வேண்டும்.
இவ்வாறு இல்லாமல் தென்கிழக்கில் கிணறு அமைந்தால் அவ்வீட்டில் பெண்கள் எப்பொழுதும் வியாதிக்கு உள்ளாகி இருப்பார்கள்.
வடகிழக்குவடக்குகிழக்கு பாகங்களில் ஆழ்குழாய் கிணறுகளோகீழ்நிலைத் தொட்டிகளோசெப்டிக் டேங்குகளோ இருந்தால்,   வீட்டில் மகிழ்ச்சி என்றும் நிலவும், லெட்சுமி கடாட்சம் மிகுந்து இருக்கும் எந்த கெடுதலான விளைவுகளிலிருந்தும் தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் அந்த வீட்டிற்கு இருக்கும்.

இதைப் போல வாஸ்துவைப் பற்றி விரிவாக தனி ஒரு நூலாக வெளியிட உள்ளேன்.



No comments:

Post a Comment