Sunday, 26 July 2026

உங்கள் வாழ்வின் 70% வெற்றியைத் தீர்மானிப்பது உங்கள் பெயரே!

 

ஒவ்வொரு மனிதருக்கும் பிறந்தது முதல் வளரும் எல்லா நாட்களும் அதிக பட்சமாக பயன்படுத்தும் ஒரே செயல் பெயரை மையமாக வைத்தே செயல்கள் நடைபெறுகிறது.

பெயர் ஒருவரின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக உள்ளது.

பெயர் பெற்றோரின் அரவணைப்புக்கு காரணமாக உள்ளது

பெயர் நன்றாக படிப்பதற்கு காரணமாக உள்ளது

பெயர் நல்ல வாழ்க்கை துணை அமைய காரணமாக உள்ளது

பெயர் நல்ல தொழில் அமைய காரணமாக உள்ளது

பெயர் நல்ல லாபம் கிடைக்க காரணமாக உள்ளது

பெயர் நல்ல ஆரோக்கியம் கிடைக்க காரணமாக உள்ளது

பெயர் நல்ல சிந்தனை பெற காரணமாக உள்ளது

பெயர் நல்லது கெட்டதை உணர காரணமாக உள்ளது

பெயர் நல்ல செயலை உருவாக்க காரணமாக உள்ளது

பெயர் நல்ல புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த காரணமாக உள்ளது

பெயர் உணர்வுபூர்வ சிந்தனைக்கு காரணமாக உள்ளது

பெயர் நடைமுறை அறிவை கொடுக்க காரணமாக உள்ளது

பெயர் கலைத்துறை அறிவை கொடுக்க காரணமாக உள்ளது

பெயர் ஆராய்ச்சி அறிவை ஏற்படுத்த காரணமாக உள்ளது

பெயர் வம்பு வழக்குகளில் இருந்து  தற்காத்து கொள்ள  காரணமாக உள்ளது

பெயர் மன அமைதியை ஏற்படுத்த காரணமாக உள்ளது

பெயர் மிகப்பெரிய நட்சத்திரங்களாக  மிளிர காரணமாக உள்ளது

 

 

காரண காரியம் பொறுத்தே அனைத்து செயல்களும் நடக்கிறது

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பது உண்மை

நமது எண்ணம் போல் வாழ்வு என்பது உண்மை

ஒத்தவை தன்னை ஓத்தவற்றையே ஈர்க்கும் என்பது உண்மை

நினைப்பதுதான் நடக்கும் என்பது உண்மை

தலையெழுத்து படிதான் நடக்கும் என்பது உண்மை

தலையில் எழுதியது எது என பார்த்தால் வழி பிறக்கும் என்பது உண்மை

உனக்கு எது நடக்கும் என்று எழுதியதோ அது நடக்கும் என்பது உண்மை

காரணத்தை முன்னிலை படுத்தியே காரியம் நடக்கிறது .

எல்லா செயலிலும் முதன்மை செயல் பெயர் ஆகும் .

தலை எழுத்து என்பதும் பெயரே

உங்கள் எண்ணங்கள் யாவும் காலத்தால் மாறக்கூடியது ,ஆனால்,மாற்றமே இல்லாத எண்ணம் பிறந்தது முதல் இன்று வரை பெயர் மட்டுமே

ஆக நமது எண்ணம் ,ஒத்தவை ,நினைப்பது , தலையெழுத்து, நடப்பவை செயல் அனைத்திற்கும் பெயரே காரணமாக உள்ளது .

பெயர் ,வீடு இவை செயற்கையான விதி நாம் வைத்து கொல்வதால் நாம் வடிவமைத்து கொல்வதால் இது செயற்கையான விதி .

இயற்கை எப்பொழுதும் அனைவருக்கும் ஒரே மாதிரி தான் இயற்கையின் விதியில் தற்காப்பு தன்மை அதனுள்ளேயே இருக்கும் .

உதாரணத்திற்கு : ஒருவர் விஷ உணவை உட்கொள்வார் என இயற்கையான விதி என்றால் அவர் சாப்பிடும்பொழுது அவருடைய கவனம் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படும் .தண்ணீரை கூட கூர்ந்து பார்த்து குடிப்பார் .மற்றவர்கள் அவரை கிண்டல் செய்வார்கள் .அவர் சற்று பழைய உணவாக இருந்தாலும் ஒத்துகொள்ளாது .

ஆக,இயற்கையான விதி எப்போதும் தற்காப்போடு இருக்கும்.

ஆனால் செயற்கையான விதி நாம் அமைத்து கொள்வதால் வருவது .பெயரும் வீடும் சரியாக அமையும் பச்சத்தில் அதிர்ஷ்டத்தை பெறமுடியும்.சரியாக அமைவது என்பது 10%அமைப்பது தான் அதிகம் .

பெயரை பொறுத்தவரை 70 % பலமுண்டு

இருக்ககூடிய இடம் 30% பலமுண்டு

ஆக நாம் செய்யும் செயலை முறைப்படி நியூமராலஜி படி பெயரும் வாஸ்துபடி வீடும் அமையும் பட்சத்தில் 100% அதிர்ஷ்டத்தை அனுபவிக்கலாம் .அவ்வாறு செய்யாவிடில் பெயரில் உள்ள பலன் என்ன உள்ளதோ அதை அப்படியே அனுபவிப்பீர்கள் .ஏனென்றால் " தீதும் நன்றும் பிறர்தர வாரா " நாமே நமது பெயருக்கு காரணம் .

நோய் நாடி நோய்முதல் நாடி -யும் பெயரே எல்லாவற்றிற்கும் காரணம்

நம் அனைத்து சிந்தனைக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் மூலம் பெயரே ஆகும் .மிகப்பெரிய ரகசியம் பெயரே ஆகும் .

No comments:

Post a Comment